Tuesday, April 29, 2025
HomeUncategorizedகணவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை!

கணவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று (18.04.2024 ) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவல் வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் அவரது மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஒரோவீட்டில் இருவரின் உயிரிழப்பு நெடுங்கேணி பிரதேசத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது இரண்டு பிள்ளைகளை தவிக்கப்பட்டுவிட்டு பெற்றோர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியது மட்டுமல்ல இந்த குடும்பத்தில் உள்ள இரண்டு பிள்ளைகளின் எதிர்லாம் தொடர்பிலம் சிந்திக்கவைத்துள்ளது.
இதனை பார்க்கும் கொடைவள்ளல்கள் உதவும் பக்குவம் உடையவர்கள் இவ்வாறானவர்களுக்கு உதவி செய்யுங்கள்

தற்கொலைகள் முடிவல்ல அவற்றுக்கு அப்பால் தற்கொலையை தடுப்போம் வாழ்கையினை எதிர்கொண்டு வாழ்வோம் கஸ்ரங்கள் துன்பங்கள் மனிதபிறவி அனைவரும் உரியது அதனை எதிர்கொண்டு கடந்து செல்வோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments