Monday, April 28, 2025
HomeUncategorizedசிவபுர வளாகத்தில் - மகா கும்பாபிஷேகம்!

சிவபுர வளாகத்தில் – மகா கும்பாபிஷேகம்!

கிளிநொச்சி முகமாலை சிவபுர வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் நவக்கிரக மூர்த்திகள் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று (05) சிறப்பாக இடம்பெற்றது 

சுவிட்சர்லாந்து அருள்மிகு சூரிச் சிவன் கோவில்  சைவத் தமிழ்ச் சங்கத்தினால்  அன்பே சிவம் அறக்கட்டளை எனும் பெயரில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுக்கான பல்வேறு மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகிறது

அந்தவகையில்  வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின்  முகமாலைப் பகுதியில் மூதாளர் அன்பு இல்லம் ,அமிர்தம் உணவகம், அரைக்கும் ஆலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஊடாக பல குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட  முதியோர்கள் பலரை பராமரிக்கும் நோக்குடனும் சிவபுர வளாகம் உருவாக்கப்பட்டது 

சைவத்தையும் தமிழையும் வளர்ப்பது தமது முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்ட இவர்களது இந்த சிவபுர வளாகத்தில் சிவன் ஆலயம் ஒன்று ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த சிவபுர வளாகத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருளாட்சி புரிந்துவரும்  அருள்மிகு பார்வதி அம்பாள் உடனுறை பரமேஸ்வரப் பெருமாள் ஆலயத்தில் பரிவார நூதன நவக்கிரக மூர்த்திகள் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம்  05.04.2024 இன்று சிறப்பாக நடைபெற்றது

மிகச் சிறப்பாக இடம்பெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் அன்பே சிவம் அறக்கட்டளை தொண்டர்கள் முதியோர் இல்ல முதியோர்கள் கிராமமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments