Monday, April 28, 2025
HomeUncategorizedசுதந்திரபுரம் கொலனி பகுதியில் அறுக்கப்பட்ட பெருமளவான பலகையுடன் ஒருவர் கைது!

சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அறுக்கப்பட்ட பெருமளவான பலகையுடன் ஒருவர் கைது!

சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அறுக்கப்பட்ட பெருமளவான பலகையுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் 04.04.2024 இன்று இடம்பெற்றுள்ளது.

கொலனி பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்பட்டு பலகையாக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் முதிரை,பாலை மரங்கள் அறுக்கப்பட்ட நிலையில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments