Monday, May 12, 2025
HomeUncategorizedகரும்புள்ளியான்- மல்லாவி இணைப்பு வீதி செப்பனிடல் ஆரம்பம்!

கரும்புள்ளியான்- மல்லாவி இணைப்பு வீதி செப்பனிடல் ஆரம்பம்!

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த கரும்புள்ளியான் பாலியாறு ஊடான மல்லாவி இணைப்பு வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெறப்பட்ட அனுமதிக்கிணங்க கரும்புள்ளியான் குளம் கமக்காரர் அமைப்பு மற்றும் வவுனிக்குளம் திட்டக்குழு ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் கனரக வாகனங்கள் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ளன 

குறித்த வீதி மாந்தை கிழக்கு பிரதேச மக்களின் வெளி தொடர்புகளுக்கு முக்கியத்துவமிக்கதாக இருந்த போதிலும் பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில், கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் துவிச்சக்கர வண்டியில் கூட செல்லமுடியாத மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை கடந்த மாதம் 15ம் திகதி மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெறப்பட்ட அனுமதிக்கிணங்க குறித்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments