புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்று நீரினை பயன்படுத்தி 1057 ஏக்கரில் நெற்செய்கை!

புதுக்குடியிருப்பு கிழக்கு விவசாயக்குழுக்கூட்டம் இன்று 06.03.24 அன்று  நடைபெற்றுள்ளது.புதுக்குடியிருப்கு கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்றின் கழிவு நீரினை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர்  அன்புமணி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது புதுக்குடியிருப்பு கமநல சேவைத்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவராகவன் மற்றும் முள்ளியவளை கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர் விவசாயிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது முத்தையன் கட்டுகுளத்தின் கழிவு நீரினை பேராற்றில் மறித்து தடுப்பு அணைகளை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் 417 விவசாயிகளின் 1057 ஏக்கர் வயல் செய்கை பண்ண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக செய்கைக்கான விதைப்பு திகதியாக 01.04.2024 தொடக்கம் 15.04.2024 வரையும் மூன்றரை மாத நெல்லினை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலபோகத்தில் விவசாயிகளுக்கு வெள்ளத்தினால் பாரியஅழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விசாயிகள் பாதிக்ப்பபட்டுள்ளார்கள் அவர்களின் நட்ட ஈடுட்டு கோரிக்கையினை முன்வைத்துள்ளோம் அந்த நட்டஈடு கிடைத்தால்தான் தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபோக செய்கைக்கான விதைப்பு திகதியாக 01.04.2024 தொடக்கம் 15.04.2024 வரையும் மூன்றரை மாத நெல்லினை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Admin Avatar