Sunday, April 27, 2025
HomeUncategorizedஅதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்

நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.

மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.

பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments