முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை,தண்ணீரூற்று,முறிப்பு,முல்லைத்தீவ,வற்றாப்பளை,உடுப்புக்குளம்,அளம்பில்,செம்மலை,சிலாவத்தை போன்ற பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈ தாக்கத்தினால் தென்னைமரங்களின் ஓலைகள் கறுப்பாகியதுடன் சில இடங்களில் கருகிய நிலையும் காணப்படுகின்றது இதனால் தெங்கு செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பாரியளவிலான தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இவ்வாறான பாரிய தோட்டங்களை வைத்திருக்கும் இடமாக அளம்பில் செம்மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. அளம்பில் பகுதியில் உள்ள மாதிரி தென்னை செய்கையாளரான பெர்ணான்டோ அலைக்சிஸ் அமலதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்

தென்னைக்கு கீழ் காணப்படும் விவசாய மரங்களும் இந்த வெண் ஈ தாக்கத்திற்கு உள்ளாகி கரு நிறத்திற்கு மாறியுள்ளன.
வெண் ஈயின் தாக்த்தினால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும் என்றும்தெரிவித்த ஒரு தெங்கு செய்கையாளர் இதனை தடுப்பதற்காக தான் பல்வேறு முயற்சி செய்துள்ளதாகவும்  பெர்ணான்டோ அலைக்சில் அமலதாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தான் ஒரோ நேரத்தில் தென்னை மரங்களின் கீழ் உள்ள ஓலைகளை அடியில் போட்டு எரித்து பார்த்துள்ளார் அத்துடன் சலவைத்தூள் கரைசலை பாரிய பம்மூலம் தென்னை மரங்களுக்கு விசிறிபார்துள்ளார் இவை அனைத்திற்கும் கட்டுப்பட்டாதக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்காலத்தில் போரினால் அழிவடைந்த தென்னைகளை மீள வைத்து பாதுகாத்து பராமரித்து நல்ல பலனினை அடைந்துவரும் நிலையில் இந்த நோய்தாக்கம் ஆனது தென்னைமரங்களின் இலைகளின் பச்சையத்தினை இல்லாமல் செய்து தென்னை மரங்களை  இறக்கச்செய்;யும் நிலைதான் ஏற்படும்.

தென்னை ஓலை மினுக்கல் தன்மையுடன் காணப்பட்டு பின்னர் கறுப்பு கலராக மாறுகின்றது இதன்போது பாணி மாதிரி ஒட்டுகின்றது இந்த வெண் ஈ தென்னை ஓலையின் கீழ் பக்கத்தில் காணப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த சரியான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Admin Avatar