Monday, April 28, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் 15 இடங்களுக்கு குடிநீர் வசதி கையளிப்பு!

முல்லைத்தீவில் 15 இடங்களுக்கு குடிநீர் வசதி கையளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பாடசாலைகள் முன்பள்ளிகள் சிறுவர் இல்லங்கள் உள்ளடங்களாக 15 இடங்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம்  நிறைவேற்றப்பட்டு நேற்று (06) கையளித்து  வைக்கப்பட்டுள்ளது

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் ஊடாக அவர்களுடைய நீரினைப்பை பெற்றுக் கொள்வதற்கு உரிய 524 022..50  நிதியை செலுத்தி  பாடசாலைகள் முன்பள்ளிகள் சிறுவர் இல்லங்கள் உள்ளடங்களாக 15 இடங்களுக்கு   குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது

பல்வேறு சமூக நல தொண்டுகளை ஆற்றி வருகின்ற கலாநிதி  வேலாயுதம் சர்வேஸ்வரன் அவர்களுடைய ஒழுங்குபடுத்தலில் லண்டனில் வசிக்கும் சொலிகள் பாடசாலை   (Solihull School)  ஆசிரியர்களான ,மார்க் பெனி(Mr. Mark Penney ) மற்றும் டோனா பெனி (Mrs Donna Penney,)  ஆகியோரின்  Team Solihull UK  அமைப்பினூடாக சேகரிக்கப்பட்ட நிதியூடாக 524 022..50 பெறுமதியில் குறித்த 15 இடங்களுக்குமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி நேற்றைய தினம் (06) உரியவர்களிடம் கையளித்தனர்

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதி சிறுவர் அபிவிருத்தி நிலையம், கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முல்லைத்தீவு மகா வித்தியாலயம், சுதா 1 முன்பள்ளி, டில்லி முன்பள்ளி ,றோயல் லீட் முன்பள்ளி, தீர்த்தக்கரை முன்பள்ளி, புனித யூட் முன்பள்ளி, முள்ளியவளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, முகிலன் முன்பள்ளி, அலெக்ஸ் முன்பள்ளி, செல்வபுரம் முன்பள்ளி,  ஹுறைசா முன்பள்ளி, முல்லைத்தீவு இந்து தமிழ் கலவன் பாடசாலை, புகழருவி  முன்பள்ளி ஆகிய   15   இடங்களுக்கே இவ்வாறு குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது

நேற்றைய தினம் இந்த குடிநீர் கையளிக்கும் திட்டம் இடம்பெற்று   பதினைந்தாவதாக  முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று (06)  மாலை திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மகா வித்தியாலய பாடசாலை முதல்வர் ஞா ஜெபநேசன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் அருட்தந்தை சதீஸ்குமார், வைத்தியர் வேலாயுதம் சர்வேஸ்வரன், நிதியுதவியை வழங்கிய லண்டனில் வசிக்கும் மார்க் பெனி (Mr. Mark Penney ) & (Mrs Donna Penney,) மற்றும் டோனா பெனி தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினுடைய முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் கஜீவன் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினுடைய ஊழியர்கள்  கலந்து கொண்டு மாணவர்களுக்கான குடிநீர் திட்டத்தை மாணவர்களிடம் கையளித்தனர்  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments