வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவெடுக்கு நாறி சிவன் ஆலயத்தில் நாளையதினம் சிவராத்திரி நிகழ்வுகளை நடத்துவதற்கு சிவ பக்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் ஒழுங்கு படுத்தலுக்காக பூசகரும் பூசைக்கு தேவையான பொருட்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளது இதனை நெடுங்கேணி பொலீசார்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
அங்கு சென்றவர்களின் தேசிய அடயாள அட்டைகள் சாரதி அனுமதிப்பத்திரங்கள்,தொலைபேசிகள் என்பன பொலீசாரால் பறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில்ஆலய பூசகரான மதிமுகராசா பொலீசாரால கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளைய சிவராத்திரி நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளை பொலீசார் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளை நிறுத்தகோரி பெயத்த தகவல் நிலையம் ஐ.ஜி.பி.யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால் தமிழ் மக்கள்மத்தியில் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது இலங்ககையில் நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசாங்கம் மதவழிபாட்டு சுதந்திரத்தினை கூட விட்டுவைக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.