இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி விடுதலையாகி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் உடல், சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சாந்தனின் உடலுக்கு முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.