Monday, April 28, 2025
HomeUncategorizedசாந்தனின் உடலுக்கு- பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி!

சாந்தனின் உடலுக்கு- பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி!

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அண்மையில் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது., பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று காலை அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்குஎடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது

அங்கிருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சியில் பெரும்திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் தொடர்ந்து பளை ஊடாக கொடிகாமம் ஊடாக அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments