திருட்டு ஒன்றின் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காணாமல் போன குறித்த இளைஞன் கடந்த 23-01-2023 இடம்பெற்ற திருட்டு வழக்கொன்றின் முக்கிய சாட்சியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது …….
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் 22-01-2023 நள்ளிரவு வீட்டின் உரிமையாளர் தாயாரின் வீட்டில் அன்றைய தினம் தங்கியிருந்த வேளை , வீட்டிற்குள் புகுந்த திருட்டு கும்பல் பொருட்கள் அனைத்தையும் , கட்டட ஜன்னல் தளபாடங்கள் அனைத்தயும் விடிவதற்குள் சூறையாடி சென்றிருந்தனர்
வீட்டின் உரிமையாளரால் 23-01-2023 அன்று நட்டாங்கண்டல் போலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய சென்றபோது மல்லாவி போலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு நட்டாங்கண்டல் பொலிசாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
( குறித்த போலிஸ் நிலையம் போலிஸ் காவலரணாக இருந்ததுடன் அதன் பிற்பாடே போலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது ).
உரிமையாளரும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்ப்பில் மல்லாவி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடை பதிவு செய்து அது தொடர்பான வழக்கு இன்று வரையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது
இது இவ்வாறு இருக்க மாந்தை கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலய உண்டியல்கள் , மற்றும் மக்களின் கால்நடைகள் என்பன திருடப்பட்டு வந்திருந்தன .
இதன் சந்தேகத்தின் பேரில் காணாமல் போன குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , விசாரணைகளும் இடம்பெற்றிருந்த நிலையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் பொலிசாருக்கு கிடைத்தன
மேற்கண்ட வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான தகவல்களும், யார் யார் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் என்ற தகவல்களும் பொலிசாருக்கு கிடைத்தன இதனடிப்படையில் குறித்த இளைஞனை சாட்சியமாக பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர் பொலிசார் இதன் வழக்கு விசாரணைகள் ஓரிரு வாரங்களுக்குள் வர இருந்த நிலையிலேயே குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளார்
இதே வேளை வழக்கின் அன்று காணாமல் போன இளைஞனுக்கு நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதுகுறித்த திருட்டு சம்பவத்தின் பின்னணியில் பலர் கைது செய்யப்படும் அபாயம் இருந்ததாலேயே குறித்த இளைஞன் காணாமல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிகின்றனர்
இதேவேளை ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தந்தையால் 05.11.2023 அன்று நட்டாங்கண்டல் போலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்க்மைய போலீசார் மற்றும் உறவினர்கள் மாந்தை கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர் ,
தேடுதல் நடவடிக்கையில் இளைஞர் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்பட்ட பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று அன்றைய நாளில் கண்டெடுக்கப்பட்டிருந்தது இந்த தருணத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட ஓரிரு நாட்களின் பின்னர் காணாமல் போன இளைஞன் பாவித்ததாக நம்பப்படும் துவிச்சக்கர வண்டி ஒதுக்குப்புறமாக உள்ள ஆற்றங்கரை அண்டிய காட்டு பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருன்தது
குறித்த விசாரணைகளை போலீசார் தீவிர சிரத்தை எடுத்து விசாரணை வளையத்திற்குள் உள்நுழைக்காமையினால் , குறித்த இளைஞன் தொடர்பான அனைத்து தரவுகளும் அல்லது தகவல்களும் மூடி மறைக்கப்பட்டிருந்தன , அல்லது கிடப்பில் போடப்பட்டிருந்தன இந்த சந்தர்ப்பத்தில் தான் காணாமல் போன இளைஞன் பாவித்த தொலைபேசி அந்த பிரதேச இளைஞர் ஒருவரின் கையில இருப்பதை கண்ட காணாமல் போன இளைஞரின் சகோதரர் நேற்று முன்தினம் குறித்த தகவலை பொலிசாரிடம் இரகசியமாக வழங்கியிருந்தார் .
இதனடிப்படையில் நேற்றைய தினம் தொலைபேசி வைத்திருந்த குறித்த இளைஞரை கைது செய்த போலீசார் இளைஞரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
அதில் “ வேட்டைக்கு சென்ற இடத்தில் குறித்த தொலைபேசியை நான் கண்டெடுத்தேன் என பொலிசாரிடம் தெரிவித்திருந்த நிலையில் , தொலைபேசி கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு இளைஞர் அடையாளம் காட்டுவதற்காக பொலிசாருடன் சென்றிருந்தார் , குறித்த இடத்தையும் அடையாளம் காட்டியிருந்தார்
இதேவேளை குறித்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசியை போலீசார் சான்று பொருளாக எடுத்து கொண்டதுடன், குறித்த இளைஞரையும் வெளியிட பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி , குறித்த இளைஞரை விடுவித்திருந்தனர்
இதேவேளை மாந்தை கிழக்கு பகுதியில் மர்மமான முறையில் 2 பேர் இறந்துள்ளதுடன் , அவர்களும் நீதிமன்ற வழக்குகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் மிக முக்கிய சாட்சியமாக இருந்தனர் என்பதுடன் குறித்த இளைஞரும் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சத்தில் தாம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
மாந்தை கிழக்கில் சட்டவிரோத காடளிப்புகள் மற்றும் மணல் அகழ்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் கட்டுமீறி காணப்படுவதுடன் நட்டாங்கல்ண்டல் போலீசார் எந்தவொரு நடவடிக்கைகளும் இன்றி அமைதியாக இருப்பது வேதனை அளிப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்