நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்!

நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்-குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினையும் மீறிய பௌத்தவிகாரை!
இன்று வவுனியாவில் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர்கள்,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சென்று ஆராய்ந்துள்ளார்கள்.

ஆனால் முன்னர் வெளியான செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்,டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் சென்று அங்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக மீள சிவலிங்கம் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.

குறித்த இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் அங்கு நடந்தவற்றினை பார்வையிட்டுள்ளதுடன் ஆலயத்திற்கான பதிவுகள் ஆவணங்கள் எவையும் இல்லாத காரணத்தினால் நீதிமன்றில் வழங்கு தொடப்பட்ட நிலையில் அங்கு சிலைவைக்கமுடியவில்லை என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்போது நிர்வாகத்தினரிடம் ஆலயம் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருக்கவில்லை. எனவே, அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலயத்துக்கு ஜீவன் தொண்டமானுடன் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.கா தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள், பாபு சர்மா உட்பட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை 03.04.2023 நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் பங்கேற்கவுள்ளார்.

Tagged in :

Admin Avatar