ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் -கோரிக்கை!

ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் முல்லைத்தீவு விவசாயிகள் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் அனைவரிடமும் நெல்லினை அரசாங்கம் கொள்வனவு செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கிலோ 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் கமநலசேவை நிலையம் ஊடாக நெல்கொள்வனவு ஒரு விவசாயிடம் இருந்து 5000 ஆயிரம் கிலோவரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொள்வனவு செய்யப்பட்டு வந்தாலும் இன்னும் பல விவசாயிகள் நெல்லினை காயவைத்து நல்ல விலைக்கு விற்கமுடியாமல் வீடுகளில் அடுக்கிவைத்துள்ளார்கள்.

கமநலசேவைத்திணைக்களம் குறிப்பிட்ட சில விவசாயிகளிடமே நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஏனை பல விவசாயிகள் நெல்லினை விற்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது தனியார் கிலோ 88 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்துவந்தாலும் பல விவசாயிகளிடம் நெல் காணப்படுகின்றது

 நெல்லினை வழங்குவதற்கும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள் விவசாயிகள் சுமார் 20 கிலோமீற்றருக்கு அப்பால் விவசாய நிலங்களை வைத்திருக்கின்றார்கள்  அவர்களின் விவசாய நில பதிவு ஒரு கமநலசேவை நிலையத்திலும் அவர்கள் தற்போது நெல்லினை காயவைத்து இன்னுமொரு பிரிவில் அவர்களின் வசிப்பிடமான வீட்டில் வைத்துள்ளார்கள்.

அவ்வாறான விவசாயிகள் வீடுகளுக்கு அருகில் உள்ள கமநலசேவை நிலையங்களில் நெல்லினை வழங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பல விவசாயிகளிடம் நெல் இருப்பாக காணப்படுவதால் அவர்களின் நெல்லினை அரசாங்கத்திற்கு விற்பனை செய்ய ஆவண செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

உதாரணமாக ஒட்டுசுட்டானில் வயல் வைத்திருக்கும் விவசாயி முள்ளியவளையில் வாழ்ந்து வருகின்றாறர்கள்  சுதந்திரபுரத்தில் வயல் வைத்திருக்கும் விவசாயி புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார். தண்ணிமுறிப்பில் வயல் வைத்திருக்கும் விவசாயி முல்லைத்தீவில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு வயலில் நெல்லினை அறுவடை செய்த விவசாயிகள் காயவைத்த நெல்லினை தங்கள் வீடுகளில் அடுக்கிவைத்துள்ளார்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கமநலசேவை நிலையங்கள் ஊடாக நெல்லினை வழங்குவதற்கு ஆவண செய்யவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை..

Tagged in :

Admin Avatar