Monday, April 28, 2025
HomeUncategorizedஇரணப்பாலையில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!

இரணப்பாலையில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் அறுவர் கைது!

யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை 5ம் வட்டாரம் இரணபாலை புதுக்குடியிருப்பில்-உள்ள தென்னை தோட்டத்தில் தோண்டிய போது 06 பேர் 12-02-24 அன்று பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

12.02.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.ci ஹேரத்துக்குக் கிடைத்த தகவலின்படி, இரணபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டது.

குறித்த இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக்கொண்டிருந்தது
சந்தேக நபர்களும் அவர்களது சொத்துக்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நெடுங்கேணி,மதவாச்சி,பதவியா,தெய்நதர,ஹக்மான போன்ற பகுதிகளை சேர்தவர்களே. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் 13.02.2024 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments