Monday, April 28, 2025
HomeUncategorizedகபடி போட்டியில் வெற்றிபெற்ற பாலிநகர் ஸ்கைலாப் பெண்கள் அணி!

கபடி போட்டியில் வெற்றிபெற்ற பாலிநகர் ஸ்கைலாப் பெண்கள் அணி!

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையின் ஆதரவுடன் கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் ஆண்,பெண்களுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்களாக (10,11) வன்னிவிளாங்குளம் அம்பாள் பரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் நடைபெற்றுள்ளது.


முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கிடையில் பகல் இரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்கள் நினைவு கேடயங்ளக் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அண்களுக்கான கபடி போட்டியில் முதலாம் இடத்தினை முத்தமிழன் விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தினை யோகபுரம் விளையாட்டு கழகமும் பெற்றுள்ளன.

பெண்களுக்கான கபடி போட்டியில் முதலாம் இடத்தினை பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகமும் இரண்டாம் இடத்தினைமுத்தமிழன் விளையாட்டு கழகமும் பெற்றுள்ளன.

வெற்றிபெற்ற கழகத்தினருக்கும் வீர வீராங்கனைகளுக்கும் வெற்றி கேடயங்களும் பண பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இறுதி போட்டி நிகழ்வு கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக விளையாட்டு உத்pதயோகத்தர்கள் விளையாட்டு கழகத்தினர் வீர வீரங்கனைகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments