முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 12.02.2024 இன்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் இருந்த குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

தற்கொலை ஒரு முடிவல்ல உங்களுக்கும் பல பிரச்சினைகள் காணப்படும் இவ்வாறு காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் உள்ளன அதற்காக தவறான முடிவு எடுத்தால் பிரச்சினைககள் தீர்ந்துவிடும் என்பதல்ல இந்தல உலகில் வாழ்வதற்காகவே மனித பிறவியினை கடவுள் உருவாக்கினான் சாவு அனைவருக்கும் வரும் அது வரும் போது ஏற்றுக்கொள்ளவேண்டும் அதுவரை தடைகளை தாண்டி மனிதவாழ்க்கையினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றி அமைக்கவேண்டும்.
இன்று வடமாகாணத்தில் இவ்வாறான தவறான முடிவுகைள எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இவ்வாறான பிரச்சினைகளில் சிக்கி இருந்தால் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லிக்கொடுங்கள் அவர்களையும் இந்த மனிதப்பிறப்பின் அர்த்தத்தினை புரிந்து வாழ வழிசெய்யுங்கள்.