முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் முதியோருக்கான முதியோர் ஓய்வகம் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முதியோருக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் மாவட்ட செயலம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தின் சமூகவேகைகள் திணைக்களத்தின் கீழ் உடையார் கட்டு வடக்கு கிராமத்தில் உள்ள முதியவர்களுக்காக 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு வடக்கு கிராமஅபிவிருத்தி சங்க தலைவர் பாலகிஸ்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்,புதுக்குடியிருப் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம மட்ட அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன்
கட்டத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் நாடவினை வெட்டி திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.
நிகழ்வின் போது கிராமத்தினை சேர்ந்த 140 முதியவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள ஈசன் குடும்பம் மற்றும் லண்டனில் உள்ள இராமச்சந்திரன் சந்திரவதனி குடும்பத்தினரின் நிதி பங்களிப்பில் ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

