முல்லைத்தீவில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி!

முல்லைத்தீவு வலயத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை, குமுழமுனை மகாவித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 44 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியானது விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தினால் 22.01.2024 முதல் 26.01.2024 வரை ஐந்து நாட்கள் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது.

மாணவர்களின் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், தலைமைத்துவம், குழுசெயல்பாடு, தொடர்பாடல், திட்டமிடல், நேர முகாமைத்துவம் மற்றும் முன்வைப்பு திறன் சார்ந்த திறன் விருத்திக்கும், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்க்கும் இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. செயற்பாடுகள் முறையில் நடாத்தப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறையில் மாணவர்கள் சிறந்த முறையில் தங்களது தலைமைத்துவம் சார்ந்த துலங்கல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (26.01.2024) இறுதி நிகழ்வாக நடைபெற்றது.

இதில் பயிற்சியில் கலந்து கொண்ட 44 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விசன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.மயூரன் அவர்களும், விசன்ஸ் நிறுவனத்தின் முல்லைத்தீவு வலய ஒருங்கிணைப்பாளர் திரு.சிறி அவர்களும், நிறுவனத்தின் ஏனைய வளவாளர்களும் மற்றும் மூன்று பாடசாலையின் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், குமுழமுனை மகாவித்தியால பாடசாலை அதிபர் திரு.ஜெயவீரசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

Tagged in :

Admin Avatar