Sunday, May 11, 2025
HomeUncategorizedதென்னியன்குளம் G.T.M.S மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

தென்னியன்குளம் G.T.M.S மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌதீக வளப்பற்றாக்குறையுடன் துணுக்காய் கல்வி வலயத்தில் இயங்கிவரும் தென்னியன்குளம் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலை மாணவர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் நிதி உதவியில் கற்றல் உபகரணங்கள் 19.01.2024 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவினை பிறப்பிடமாகவும் பிரான் நாட்டில் வசித்துவந்து அமரத்துவம் அடைந்த கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 19.01.24 அன்று அவரின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் ஏர் நிலம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்களும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அமரத்துவம் அடைந்த கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செய்யப்பட்டு ஆத்மா சாந்தி பிரார்த்தனையுடன் தொடர்ந்து பாடசாலையில் கல்விகற்று வரும் 113 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள்,கிராம சேவையாளர்,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் ஏர் நிலம் அமைப்பின் செயலாற்றுனர் படைப்பாளி தே.பிரியன்,கவிஞர் முறிகண்டி லக்சிதரன் உள்ளிட்டவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments