Wednesday, May 14, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் தீடீர் நடவடிக்கை!

புதுக்குடியிருப்பில் தீடீர் நடவடிக்கை!

புதுக்குடியிருப்பில் டெங்கு நோய்பரவலை தடுக்க நடவடிக்கை. துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு பதாகை.

புதுக்குடியிருப்பில்  டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று (07.01.2024) காலை தொடக்கம் பிற்பகல் வரை புதுக்குடியிருப்பு நகர்பகுதி மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்திற்குட்பட்ட பகுதியை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள் , பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பாெருட்களை அகற்றுமாறும், டெங்கு அபாய நிலையினை கருத்திற்காெண்டு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments