Wednesday, May 14, 2025
HomeUncategorizedஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை நேற்று (04.01.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேராவில் இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம், உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்த 22, 27  வயதுடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது  கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு இருவரையும் அனுப்பியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திவரும் சிற்றுண்டி சாலைகளில் வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனைசெய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் இவ்வாறான இராணுவ சிற்றுண்டி சாலைகளுக்கு அருகில் வைத்தே ஐஸ்போதைப்பொருளுடன் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments