முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு தெற்கு பகுதியில் உள்ள குரவில் கிராமத்தில் உள்ள டீ-1 வாய்க்கால் வீதி முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதனை திருத்திதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
உடையார் கட்டு தெற்கு கிராமத்தில் உள்ள 250 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான டி-1 வாய்க்காலுடன் கூடிய வீதியினை நம்பி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
2.5 கிலோமீற்றர் வiரான நீளம் கொண்ட குறித்த வாய்க்கால் வீதி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வீதி எந்த அபிவிருத்தியும் செய்யாத நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும் மழையினால் வீதி வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு பாரிய குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
ஒரு முச்சக்கரவண்டியோ அல்லது மோட்டார் சைக்கிலோ செல்லமுடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் வயல் காவலுக்கு செல்பவர்கள் என அதிகளவானவர்கள் இந்த வீதியினை பயன்படுத்தி வருகின்றார்கள் ஆனால் தற்போது வீதியால் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது
உடையார் கட்டு தெற்கு குரவில் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தினால் அடிக்கப்பட்டு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது
நீர்பாசன திணைக்களம் தனக்கு சொந்தமானவீதிகளில் ஒன்றாக காணப்படும் இந்த வீதியினை கண்டு கொள்வதில்லை இனிவரும் காலம் வயல் அறுவடை செய்யவுள்ள காலம் அதனால் ஒரு வாகனம் கூட செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது
எனவே நீர்பாசன திணைக்களத்திற்கு கீழ் உள்ள இந்த வீதியினை உரிய திணைக்கள அதிகரிகரிகள் கவனத்தில் எடுத்து வீதியினை திருத்தி தருவதுடன் இந்த வீதியுடன் வரும் வாய்க்காலினையும் திருத்தி கொடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.