Wednesday, May 14, 2025
HomeUncategorizedவிசுவமடுவில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு!

விசுவமடுவில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு!

தமிழ் மக்கள் மீது கண்ணியமான பற்றுடையவராயிருந்த  மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஈழத்தின் வன்னியில் ‘முல்லைத்தீவு வள்ளுவர்புரம் படைப்பாளர் இணைவகம்’ ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வானது இன்று 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 04. 45 மணிக்கு விசுவமடு றெட்பானா சந்தியில்  இடம்பெற்றது. 

 சமாதான நீதவானும் ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி ஜெசிந்தா இரவீந்திரன் நினைவு நிகழ்விற்கு தலைமை வகித்தார். அகவணக்கம், நினைவுச்சுடர் ஏற்றல், மலர் வணக்கம் என்பன இடம்பெற்றன.  

நினைவுக் கவிதையினை சமுர்த்தி உத்தியோத்தர் யோ.தமிழ்க்குமரன் வழங்கினார்.  நினைவுரைகளை யோ.புரட்சி, சிவஸ்ரீ நவரத்தினம், கவிஞர் திரியாயூரான் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்வில் சமூகமட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள், சங்கநாதம் கலாமன்றத்தினர், பொதுமக்கள், விஜயகாந்த் அவர்களின் இரசிகர்கள் உள்ளடங்கலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments