அம்பாளின் மகிமையினை கொச்சைப்படுத்தி பழிவாங்கும் செயல்-தி.இரவீந்திரன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் செயலாளர் மற்றம் பாம்புக்கடிக்கு இலக்கானவர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று 26.12.23 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி உண்மை சம்பவத்தினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.

தி.இரவீந்திரன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் மற்றும் பாம்புக்கடிக்கு இலக்கான கௌரிகரன் ஆகியோர் வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலயத்தில் நடந்த சம்பவம் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியுள்ளதாக அதன் உண்மை நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

அண்மையில் சமூக வலைத்தள ஊடகங்களில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம் என்றும் அம்மன் ஆலயத்தில் களவாட சென்றவர்கள் பாம்புகடிக்கு இலக்கான அதிசயம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் தி.இரவீந்திரன் கருத்து தெரிவிக்கையில்..

ஊடகங்களில் வெளிவந்த பொய்யான தகவல்களை உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டமையினால் உண்மைத்தன்மையினை வெளி;க்கொண்டுவருவதற்காகவும் அம்மனின் மகிமைகளையும் அம்மனின் பெயரையும் கெடுக்கின்ற விதமான மெருகூட்டப்பட்ட பல தகவல்கள் திட்டமிடப்பட்டு சில விசகிருமிகளால் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்து ஊடகங்களில் அம்மனின் மகிமையினை கொச்சப்படுத்தும் முகமாகவும்,நீண்டகாலமாக நிர்வாகத்தில் இருந்து வந்தவர்களுக்கு எதிராக நிதந்தரஉறுப்பினர்களும் பழைய நிர்வாகத்தில் இருக்கின்றவர்களும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திலும்,முல்லைத்தீவு வவுனியா உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் திட்டமிடப்பட்ட பொய்யான ஒரு செய்தியினை மக்களுக்கு வெளியிட்டதை இட்டு ஆலயத்தின் செயலாளர் என்றவகையில் மிகவும் வேதனையடைகின்றேன்.
அன்று நடந்த சம்பவம் என்னவென்றால் செயலாளராக நான் பாரம் எடுத்த பிற்பாடு திங்கள் வெள்ளி கிழமைகளில் நேரம் கிடைக்கின்ற நேரங்களில் கோயிலுக்கு சென்று பார்வையிட்டு முன்னைய காலங்களில் நடந்த தவறுகளை அனைத்தினையும் கவனித்து அந்த தவறுகள் இல்லாது மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிர்வாகத்தினை கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது.

என்னை பெருவாரியான மக்கள் அதிகூடிய 232 வாக்குக்களால் என்னை வெல்லவைத்து கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிர்வாகத்தில் இருந்து மக்களுடைய அபிலாசைகளையும் மக்களின் விருப்புக்களையும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்து நல்ல சேவை செய்வார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்து என்னை நிர்வாகத்திற்குள் அனுப்பியுள்ளார்கள்.

அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு நான் கடமையினை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் கடமையினை செய்துகொண்டிருந்த வேளையில் எனக்கு பலராலும் பலமுறைப்பாடுகள் தரப்பட்ட அவர்கள் முறைப்பாடுகள் சொல்கின்றபோது மிகவும் பயப்பிடுகின்றார்கள் முன்பிருந்த நிர்வாகத்தினர் மீது மிகவும் பயம் கொண்டுதான் எங்களிடத்தில் முறையிடுகின்றார்கள். அவர்கள் சொல்கின்றபோது நாங்கள்தான் சொன்ன என்று எங்களை அடையாளப்படுத்தி விடாதீர்கள் என்று எங்களிடம் சொல்கின்றார்கள் பழிவாங்குவார்கள் என்று சொல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அவ்வாறு மக்களின் முறைப்பாடுகளை கேட்டு நான் நிதந்தர உறுப்பினர் மகேந்திரனிடம் இது சம்மந்தமாக கலந்ததாலோசித்த போது அவர் சொன்னார் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் செயலாளர் தானே அந்த கமராவில் பார்த்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதற்கு அமைவாக நாம் பலதடவைகள் பா.கௌரிகரன் அவர்களிடம் கேட்டிருந்தேன் இந்த சி.சி.ரிவி கமராங்கள் பார்க்கதெரியுமா என்று பிழையான கமராக்களை பார்வையிட்டு அதனை சரிசெய்து தரமுடியமா என்று கேட்டபோது அதற்கு அவர் கூலி இல்லாமல் கோயிலுக்காக செய்து தருவதாக சொல்லி இருந்தார்

கடந்த வெள்ளிக்கிழமை 22.12.2023 நிதந்தர உறுப்பினர் தொழில் அதிபர் மகேந்திரன் அவர்கள் அவர் கடைவைத்திருக்கின்றார் பெற்றோல் செற் வைத்திருக்கின்றார் அவர் கடையினை பூட்டிவிட்டு மாலை 6.00 மணிக்கு வருவதாக என்னிடத்தில் தெரிவித்தார்.கௌரியும் மாலை 6.30 மணிக்குள் நானும் வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

நானும் மாலை 6.45 மணிக்கு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்றபோது ஆலயத்தின் முகாமையாளர் தனது கடமைகளை முடித்து வீடு செல்வதற்கு ஆலுய வாசலில் சென்றார் தான் வீடுசெல்வதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார். உதவி முகாமையாளர் வெளியில் கதிரையில்இருந்தார் அந்த இடத்தில் காவலாளி ஒருவரும் நின்றிருந்தார் இரண்டு காவலாளிகள் ஆலயத்திற்கு இருக்கவேண்டும் ஆனால் அன்று ஒருவர் எனக்கு சொல்லாமல் சமூகமளிக்கவில்லை கமராவினை பார்க்கசென்ற இடத்தில்தான் காவலாளி ஒருவர் கடமைக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் மகேந்திரம் அவர்களை தொடர்புகொண்டு நான் வந்துவிட்டேன் கோவிலடியில்தான் நிக்கின்றோன் என்ற தகவலை சொன்னோன் அவர் சொன்னார் வந்துகொண்டிருக்கின்றோம் அவர்கள் சரியாக 6.50 மணிக்கு கோவிலடிக்கு வந்துவிட்டார்கள்.

நாங்கள் உடன் உதவி முகாமையாளர் அவர்களிடத்தில் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்று சொன்னபோது அவர் சென்று கதவினை திறந்துள்ளார்.
ஆனால் ஊடகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது கதவினை உடைத்து கமராவினை துண்டித்து கூரிய ஆயுதங்களுடன் களவாட சென்றவேளையில் பாம்பு திண்டியதாக சொல்லப்பட்டுள்ளது அவை அனைத்தும் பொய் என்பதை நான் இந்த இடத்தில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

ஊடகங்களை கேட்டு நம்புகின்ற மக்கள்தான் ஊடகங்கள் போடுகின்ற தகவலை ஏற்று சிந்தித்து செயல்படுகின்ற மக்கள்தான் எங்கள் மக்கள்
இந்த நிலையில் ஆலயத்திற்குள் முதலாவதாக உதவி முகாமையாளரும் கௌரி,மகேந்திரன் மூன்றாவதாக நான் சென்றேன்.

உதவிமுகாமையாளரிடம் சி.சி.ரிவி கமாரவினை இயக்குவதற்கான மௌஸ் சினை எடுத்துக்கொடுங்கள் என்று நான் சொன்னபோது அந்த மௌஸ்சினை பார்த்தபோது அதில் பற்றி அசிட் வெளியேறி இயங்கு நிலையில் காணப்படவில்லை ஆகவேதான் கமராவின் பொக்சினை திறக்கவேண்டிய தேவை ஏற்பட்டது அவர் என்னிடத்தில் சொன்னார் மௌஸ் இயங்கு நிலையில் இல்லாவிட்டால் அந்த பொக்சினை செற்பண்ணி பார்க்கமுடியும் கமரா வேலை செய்கின்றது என்பதையும் பார்க்கமுடியும் என்று சொன்னார்.

அந்த பொக்ஸ் மூடியினை அகற்றிவிட்டு மீண்டும் கையினை கொண்டு சென்றபோது பாம்பு எட்டி அவரின் வலது கையின் பெருவிரலில் தீண்டிவிட்டது உடனடியாக அதனை நான் கண்ணால் கண்டேன் அவருக்கு பாம்பு கொத்திவிட்டது உடனே அவரை இறக்கி மகேந்திரம் அவர்கள் அவரை மருத்துவனை கொண்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நான் அங்கேயே நின்றவேளை அச்சுதன் என்ற உறுப்பினரும் என்னிடத்திற்கு வந்தார் இருவரும் சென்று லையிட்டினை அடித்து பார்த்தபோது பாம்பு சுருண்டுகொண்டு சி.சி.ரிவி இயங்குநிலை பெட்டிக்குள் கொட்டாவி விட்ட நிலையில் இருக்கின்றது.இவ்வாறு இருக்கின்ற போது ஆலயத்திற்கு முன்பாக நின்று நின்ற சபேசன் அவர்ளும் பெரியம்பி என்கின்ற நித்தியாதரன் அவர்களும் சு.ரவீந்திரன் என்பவரும்,சசி என்பரும் றமேஸ் என்பவரும் ஓடி வந்தார்கள். வந்து லையிட்டினை அடித்து பார்த்தார்கள்.

சபேசன் என்பவர் கம்பி ஒன்றினை வாங்கி இடித்தபோது அது பாம்பின் வயிற்று பகுதியில் குத்திவெளியேறியுள்ளது. பாம்பு கம்பியினை சுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாம்பினை மருத்துவனை கொண்டுசெல்லவேண்டிய தேவை உள்ளது.எல்லோரிடமும் கதைத்துவிட்டு நானும் அச்சுதனும்தான் மோட்டார் சைக்கிலில் கம்பியுடன் பாம்பினை கொண்டு மருத்துவனை கொண்டுசென்று மருத்துவர்களிடம் பாம்பினை கொடுத்துவிட்டு வீடு சென்றுவிட்டோம்.

22 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.24.12.2023 அன்று உதவி முகாமையாளரால் முறைப்பாடு ஒன்று முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிந்தோம்.
இந்த நிலையில் ஊடக வியலாளரிடம் இந்த தகவலை யார் தந்தது என்று தொலைபேசியில் அவுட்ஸ்பீக்கரில் நானும் மகேந்திரம்,கௌரி,வேறும் சிலர் நின்றவேளை அவர்கள் கேட்கும் படியாக அவர் சொல்லி இருந்தார் எனக்கு இந்த தகவலை பொலீஸ் தந்துள்ளது பொலீஸ் தருகின்ற தகவலை போடவேண்டிய தனது கடமை என்று என்னிடத்திலும் கூறி இருந்தார் கௌரி இடத்திலும் அவர் கூறி இருந்தார்.

இதனை நீங்கள் நன்றாக விசாரித்து போட்டிருக்கலாம் தானே என்று நான் வினாவியபோது அவர் என்னிடத்தில் சொன்னார் பொலீஸ் தந்த தகவலை நான் போட வேண்டும் போட்டுவிட்டேன் என்று சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் அடுத்த நாள் ஊடகங்களை பார்க்கின்றபோது மூன்றுபேர் கோவிலில் கொள்ளையடிப்பதற்கு கூரிய ஆயுதங்களுடன் வந்ததாகவும் முன்கதவு பூட்டினை உடைத்து உள்நுளைந்து கமராவினை துண்டித்துவிட்டு களவிற்கு முற்பட்டதாகவும் கமராவின் பொக்சினை திறக்கின்றபோது பாம்பு தீண்டியதாகவும் அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள் என்றும் முன்னுக்கு பின் முரணான பதிவுகள் அதில் காணப்பட்டுள்ளன.

ஊடகங்கள் எங்கள் மக்களுக்கான சிறந்த சேவையினை செய்வதுதான் அவர்களி;ன் கடமை அதனை எங்கள் மக்களுகம் நாங்களும் நம்பி இருக்கின்றோம் ஊடகங்கள் இனிவரும் காலத்திலாவது ஒரு செய்தியினை தகவலை வெளியிடுகின்றபோது உண்மையான ஒருதகவலை வெளியிடவேண்டும் அதுதான் சேவையாக செயலாக அமையும்

ஆகவே உண்மைக்கு புறம்பான உண்மையினை திரிவு படுத்து அம்பாளின் மகிமையினை கொச்சைப்படுத்தி நிர்வாகத்தின் செயலை நல்லதொரு செயலை செய்யவேண்டும் என்று 20 பேரை தெரிவு செய்து அனுப்பிய மக்களின் மனங்களை நோகடிக்கின்றவகையிலும் அந்த 20 உறுப்பினர்களின் மனதினை நோகடிக்கின்ற வகையிலும் சில புல்லுருவிகள் சில விசமிகள் இந்த விடையத்தினை திட்டமிட்டு தங்களுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இட்டு இதனை பழிவாங்கும் முகமாகத்தான் இதனை திட்மிட்டு செய்திருக்கின்றார்கள் என்று ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதில் அந்த செய்தியின் கருத்துக்களை பார்த்திருந்தேன் கோடி கோடியாக அடித்தவர்களை அரவம் தீண்டவில்லை 100 ரூபா களவெடுக்க சென்றவர்களை அரவம் தீண்டிவிட்டது என்ற கருத்தும் பதிவு செய்துள்ளார்கள்.
ஆகவே இந்த உண்மைக்கு புறம்பான ஊடங்களை பார்த்து பொய்யான தகவலை அறிந்துகொண்ட பொய்யான தகவலை உண்மை என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் இந்த செய்தியினை விடுகின்றோன்.

இவர்கள் திரிவு படுத்தி அவர்களின் உண்மையற்ற செயற்பாட்டுத்தன்மையினையும் தங்களின் பெய்மைத்தன்மையினையும் மறைப்பதற்காகவும் தங்களை நீதிமன்றில் கொடுத்துவிட்டார்கள் என்ற மகேந்திரம் அவர்களை பளிவாங்கும் முகமாகவும் அவர்களின் நோக்கமாக இருந்தது யார்தான் வந்தாலும் இரவீந்திரன் நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்ற செயற்பாடு வற்றாப்பளையில் காணப்பட்டது அதனையும் மீறி மக்கள் 232 பெரும்பகுதியான வாக்குகளை அளித்து நிர்வாகத்திற்குள் சென்றுள்ளேன்.

மக்கள் என்னை தெரிவு செய்து அனுப்பினார்கள் எனக்கு செயலாளர் என்ற பொறுப்பினை என்னுடைய கண்ணகித்தாய் நேரடியாக தந்த ஒரு பொறுப்பு அந்த பொறுப்பினை உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்வேன் என்று கூறி இந்த உண்மைக்கு புறம்பான செய்தியினை பொய் செய்தி என்பதை வெளிப்படுத்தி எங்களிடத்தில் பொலீசார் ஒருவிடையத்தினை கூறி இருந்தார்கள் செயலாளர் எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் கோவிலின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கு என்பதை முறைப்பாடு போட்டவரிடம் கூறியுள்ளார்கள் இன்னும் ஒரு விடையத்தினை பொலீஸ் அதிகாரி கூறி இருந்தார் உங்களுடைய செயற்பாட்டிற்கும் நிர்வாக செயற்பாட்டிற்கும் அங்கு எதுவும் இடையூறு விளைவிக்கப்பட்டால் நேரடியாக வந்து கூறச்சொல்லியும் தெரிவித்திருந்தார்.

மக்களே இந்த உண்மைக்கு புறம்பான செய்தி திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்ட செய்திகளை நம்பாது உண்மைத்தன்மையினை நம்பி எங்கள் கண்ணகித்தாயின் இடத்தில் பல வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன அவற்றையும் செய்து முடித்து நாங்கள் நல்லதொரு நிர்வாகமாக வேலைசெய்வதற்கு உங்களின் ஒத்துளைப்பினையும் நல்கி நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar