முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் உடையார்கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்று (23) சிறப்புற நடைபெற்றுள்ளது.
உடையார்கட்டு பங்கு மக்களின் கைவண்ணத்தில் உருவான 50 அடி உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரத்தினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் அவர்களினால் 23.12.2023 அன்று இரவு 8.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,துறவியர்கள்,பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 50 அடி உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரம் ஒவ்வொருநாளும் மாலை 6.00 மணிக்கு பின்னர் மக்கள் சென்று பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது