முல்லைத்தீவில் நடந்து சென்ற இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரவு வேளை வீதியால் நடந்து சென்றபோது அதே கிராமத்தினை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காரில் கம்பிகளுடன் வந்து தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குமுழமுனை கிராமத்தினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் வலது கை , வலது காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று (20) மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் மதுபோதையில் வந்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய சென்றும் முறைப்பாட்டினை வைத்தியசாலையிலுள்ள பொலிஸார் மேற்கொள்ளுவார்கள் அத்தோடு அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியிருந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவரின் சகோதரன் தெரிவித்திருந்தார்.

Tagged in :

Admin Avatar