மாங்குளத்தில் பெய்த கனமழை வீதியைமூடிய வெள்ளநீர் மக்கள் பாதிப்பு!

கொட்டித்தீர்க்கும் மழை  குளங்கள் நிறைந்து வான் பாய்கின்றன தாழ்  நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின  மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம்  மாங்குளம் பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு  மாவட்டத்தில் இன்று(14) காலை முதல் கன மழை  பொழிந்து வருகின்ற நிலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய முத்துஐயன் கட்டு குளம் தவிர்ந்த ஏனைய அனைத்து  குளங்களும்  நிறைந்து வான் பாய்கின்ற  அதே வேளையில் வீதிகளூடாக வெள்ளம் பாய்ந்து போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இதேபோன்று முல்லைத்தீவு  மாவட்டத்தின் பல்வேறு தாழ்நில பகுதிகள் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வீடுகளும் வெள்ளங்களில் மூழ்கியுள்ளது

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவினுடைய மாங்குளம் பனிக்கன்குளம் பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல்  முகாமிலும்  உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாங்குளம்  பகுதியில் 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இடைத்தங்கல்  முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற அதே வேளையிலே மொத்தமாக மாங்குளம் பகுதியில் 36 குடும்பங்களை சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல்  முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இதே போன்று பனிக்கன்குளம் கிராமத்திலும் 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tagged in :

Admin Avatar