வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவன்னி கிராமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்பல குளங்கள் நிரம்பியுள்ளதுடன் வான்பாயவும் தொடங்கியுள்ளன இதனால் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துகொண்டதால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில்,மாங்குளம்,பனிக்கன்குளம்,பண்டாரவன்னி,புளியங்குளம்,இந்துபுரம்,தட்டையர் மலை ஆகிய கிராமங்களை சேர்ந்த 115 குடும்பங்கைள சேர்ந்த 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பண்டாரவன்னி கிராமத்தில் 62 குடும்பங்கள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பண்டாரவன்னி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் வரையான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்தெரிவித்துள்ளார்கள்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் கள்ளப்பாடு,சிலாவத்தை,செல்வபுரம் கிராமங்களை சேர்ந்த 28 குடும்பங்களை சேர்ந்த 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாள்நில பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் அதிகளவான பாதிப்புக்களை சந்தித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று(14) காலை 6.00 மணி தொடக்கம் இன்று(15) காலை 6.00 மணிவரை ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் 196 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுபிரதேசத்தில் 198 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் 95 மில்லீமீற்றர் மழைவீழ்சியும் பதிவாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tagged in :

Admin Avatar