குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் முல்லைத்தீவு விசுவமடுவில்! குப்பிவிளக்கு வீழ்ந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத ஆண்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்துவந்த இளம்குடும்பம் ஒன்றிற்கு இந்த துயர சம்பசம் இடம்பெற்றுள்ளது.
சின்னையா சுறோமி என்ற இளம் குடும்பம் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலீக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
தற்காலிக வீடு,கிணறு இல்லை,மின்சாரம் இல்லை இதுபோன்ற இளம் குடும்பங்கள் எங்கள் நாட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த தை 22.02.2023 அன்று வீட்டில் ஏற்பட்ட குப்பி விளக்கு தவறி வீழ்ந்தில் ஆண் குழந்தையின் உடலில் தீப்பற்றிய நிலையில் தர்மபுரம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு சென்று பின்னர் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி 29.03.23 அன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
இந்த குழந்தையி;ன் உடலம் இன்று 31.03.23 இளங்கோபுரம் இந்து மயானாத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாளாந்தம் கூலிவேலை செய்துவரும் இந்த குடும்பத்தின் நிலையில் வீட்டிற்கான மின்சார இணைப்பு இல்லாமையினால் தாங்கள் கஸ்ரப்படுவதாகவும் காட்டு ஓராமாக நிறுவனம் ஒன்று அமைத்துக்கொடுத்த தற்காலிக கொட்டிலில் வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு கிணறுகூட இல்லாத நிலைகாணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த செய்தியினை பார்க்கும் படிக்கும் நல்ல உள்ளங்கள் யாரும் குறித்த குடும்பத்திற்கு ஏதாவது மனிதாபிமான உதவிகள் செய்யமுடியம் என்றால் அவர்களுகடன் நேரடியா தொடர்புகொள்ளுங்கள் தொலைபேசி இலக்கம் .0743345818