இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒன்று படுநட்டத்தில் இயங்குகின்றது பணிவிலக அறிவிப்பு!


இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நட்டத்தில் இயங்கிவருவதாகவும் அதில் பணியாற்றுபவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி விலகுபவர்களுக்கான விண்ணப்பபடிவங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து வெளியேறும் றூபவாகினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சமும்,குறைந்த பட்சமாக 5 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல நிறுவனங்கள் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு விற்பனை செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *