முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளதுடன் பதாதைகளை தாங்கியாவறு  ஓ.எம்.பியும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம்,மரணசான்றிதழும் வேண்டாம்,இலஞ்சமும் வேண்டாம் போன்ற கோசங்களை தாங்கி சர்வதேச விசாரணையே தங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர ஒரே வழி சர்வதேசமே பதில் சொல் என வலியுறுத்தி இந்த கவயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி சர்வதேச நீதிமன்றத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை சொல்லவேண்டும் அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம் சர்வதேசம் இலங்கைக்கு பொருளாதார பிர்ச்சினைக்கு நிறைய உதவிசொய்து கொண்டிருக்கின்றது இதேமாதிரி எங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சரியான நீதியினை பெற்றுத்தரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இன அழிப்பு தொடச்சியாக இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் ஆதாரமாக இருக்கின்றது நீதி கிடைக்கும் வரை எவரின் அழுத்தம் வந்தாலும் தொடர்ந்து போராடுவோம்.
எங்களுக்கு இந்த நட்டஈடு,மரணசான்றிதழ்கள்,ஆற்றல்படுத்தல்கள் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar