விமானத்தாக்குதலில் உயிரிழந்த மக்களது 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு (27.11.2023) காலை 10.30 மணியளவில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவிற்கொள்ளுவதற்கு ஏற்பாடாகி கொண்டிருந்த வேளை,

இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன இதில் 12 பொதுமக்கள் உயிரிழந்திருந்தார்கள்.

இந்த மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தாய்த்தமிழ் உறவுகள் நினைவேந்தல் அமைப்பு மற்றும் தாய் தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவப்படங்கள் ஒட்டிசுட்டான் சிவன் ஆலயம் முன்பாக வைக்கப்பட்ட பந்தலில் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை உயிரிழந்தவரில் ஒருவரின் உறவினர் ஏற்றிவைக்க தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்களால் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகள் 

இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியில் உறவுகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் , தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன் பொதுமக்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Tagged in :

Admin Avatar