யானை உயிரிழப்பு காணிஉரிமையாளர் சிறையில் அடைப்பு!
முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது
இந்த சம்பவம் கடந்த 22-11-23 இரவு இடம்பெற்றுள்ளது
சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் உள்ள தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளது விசாரணைகளை மேற்கோண்டுள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவரின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் யானையின் கொம்புகள் அகற்றப்பட்டு உயிரிழந்த யானை புதைக்கப்பட்டுள்ளது.
யானை உயிரிழப்பு தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து மின்சார வேலியின் காணி உரிமையாளரான 45 அகவையுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு 23-11-23அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன்.
யானையின் தந்தங்கள் மற்றும் மின்சார வேலியில் மின் இணைப்பு கருவிகள் அனைத்தும் மன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது
காணியின் உரிமையாளரை 07-12-23 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது