விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டு நடவடிக்கை!
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு போலீசின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெருமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதி உடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கிராம சேவையாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர் போலீசார் சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் போலீசார்இராணுவத்தினர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இன்று காலை 9:00மணிக்கு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது இருந்தும் தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது