Sunday, May 11, 2025
HomeUncategorizedதேராவில் துயிலும் இல்ல காணியினை படையினரிடம் இருந்து விடுவிக்கோரி ஆர்ப்பாட்டம்!

தேராவில் துயிலும் இல்ல காணியினை படையினரிடம் இருந்து விடுவிக்கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் படைஅணிகளில் இருந்து களமாடி வீரகாவியமான மாவீரர்களை விதை;த இடமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் காணப்படுகின்றது.

இந்த பகுதி போரிற்கு பின்னர் இலங்கை இராணுவத்தின் படையினர் அபகரித்து நிலைகொண்டுள்ளார்கள்.குறித்த காணியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் கற்கள் சிலைகள் அனைத்து அகற்றப்பட்ட நிலையில் அங்கு தோட்டங்கள் செய்வதும் சீமேந்து கல் அறுப்பதுமாக படையினர் முகாமிற்குள் நிலைகொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்வதற்காக படையினரிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தி 11.11.2023 காலை 9.00 மணிக்கு அமைதிவழியிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுகுழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments