Monday, May 12, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் நடந்தேறிய உலக சாதனை நிகழ்வு

முல்லைத்தீவில் நடந்தேறிய உலக சாதனை நிகழ்வு

இலங்கையின் நுவரேலியா மாவட்டத்தை  சேர்ந்த தயாபரன் என்பரின்  ஒருவர் 131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார்

international warriors book of world records   ஒழுங்கமைப்பில் குறித்த உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்தது
நுவரெலியா தாயாபரனே குறித்த உலக சாதனையை பதிவு செய்திருந்தார்

குறித்த நடனத்தை இந்தியாவில் இருந்து ரகசிய கண்காணிப்பு கமாரா மூலமாக international warriors book of world records   குறித்த அமைப்பு நடனத்தை பார்வையிடுடிருந்தது

லயன் யூட் நிமலன் அவர்களின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக டான்ஸ் மரதன் நடைபெற்றுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வு 05.11.2023 ஞாயிற்றுகிழமை நடைபெற்று 11.11.2023 சனிக்கிழமை நிறைவடைந்துள்ளது.

நிறைவு நிகழ்வில்  மதகுரு மற்றும் யோகபுரம் மகாவித்தியாலய அதிபர் த.பிறேமச்சந்திரன்,அணிஞ்சயன்குளம் கிராம சேவையாளர் திருமதி வினோதன்,தமிழ்த்தாய் கலாமன்றத்தினை சேர்ந்த திரு யோகநாதன், ஆசிரியருர் லயன் சு.சுபநேசன் கலைஞர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

நிகழ்வின்  இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments