வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கலாச்சார பேரவை இணைந்து நடாத்தும் 2023 ம் ஆண்டுக்கான கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( நிர்வாகம்) கனகசபாபதி கனகஏஸ்வரன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) சிவபாலன் குணபாலன் அவர்களும் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சந்திரசேகரன் ஜசிந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேச கலைஞர்களுடைய பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேசத்தினை சேர்ந்த கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். 20 கலைஞர்களுக்கு இளம்கலைஞர் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் 5 கலைஞர்களுக்கு முல்லைப்பேரொளி விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பண்பாணட்டு விழாவினை முழுமையாக பார்வையிட