Wednesday, March 19, 2025
HomeUncategorizedவவுனியா மண்ணின் கல்வி சொத்து முத்துசாமி முகுந்தரதன்!

வவுனியா மண்ணின் கல்வி சொத்து முத்துசாமி முகுந்தரதன்!

பிரபல இந்துநாகரிக ஆசானும் முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவருமான முகுந்தரதன் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பண்டாரிகுளம் ஐடியல் கல்வி நிறுவன இயக்குனரும், பிரபல இந்துநாகரிக ஆசிரியரும் , முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவருமான முத்துச்சாமி முகுந்தரதன் ஆசிரியர் அவர்கள் கடந்த 06-11-2023 திங்கள் அதிகாலை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்

மாங்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி முகுந்தரதன் அவர்கள் பிரபல இந்துநாகரிக ஆசானாக மாணவர்கள் மத்தியில் மாத்திரமன்றி மக்கள் மனதிலும் இடம்பிடித்திருந்தார்

இவ்வாறான நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வவுனியா நகரசபைக்கு தெரிவாகி உபதவிசாளராகவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்

இவ்வாறு மக்கள் மத்தியில் இடம்பிடித்த முத்துச்சாமி முகுந்தரதன் ஆசிரியர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த06-11-2023 திங்கள் அதிகாலை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கடந்த 08.11.2023 அன்று பண்டாரிக்குளத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது

அதிகளவான மக்கள் மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அன்னாரிற்கு விடைகொடுத்துள்ளார்கள்.
இதன்போது அன்னாரின் நினைவு சுமந்து முத்துசாமி குடும்பத்தின் உறுப்பினர்களால் பாடல்கள் இரண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

எம் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட ரதனின் நினைவு சுமந்த பாடல் அவர் கல்விக்காவும் தமிழ் தேசியத்தின் மீதும்கொண்ட பற்றின் வெளிப்பாடாக இந்த பாடல்கள் அமைந்துள்ளன அன்னாரில் பூதவுடல் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments