முல்லைத்தீவில் தொடங்கிய உலக சாதனை நிகழ்வு!
சர்வதேச வாரியர்ஸ் உலக சாதனை புத்தகம் டான்ஸ் மராத்தான் என்ற உலக சாதனை முயற்சி 128 மணிநேரம் தொடர்ந்து நடனமாடும் (டான்ஸ் மரதன் ) முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
05.11.2023 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள தொழில்நுட்ப அழகியல் கலாச்சாரம் மற்றும் பெண்கள் அதிகார மையத்தில் நிகழ்வின் அமைப்பாளர் லயன் டாக்டர் ஜே.யூட்நிமலன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது
நிகழ்வில் அனிஞ்சயன்குளம் கிராம சேவையாளர், லயன் சமூக சேவையாளர் ஆசிரியர் சுப்பிரமணியம் சுபநேசன் ,சமூக சேவையாளர் பிரதீப்,உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை தொடக்கி வைத்துள்ளார்கள்.
பெகவந்தாலாவை நுவரேலியாவினை சேர்ந்த R.A.தயாபரன் என்ற கலைஞன் தமிழகத்தில் திரைப்பட துறையில் பின்னணி நடன கலைஞராக ஈடுபட்ட கலைஞன்.
இலங்கையில் இருந்து உலக சாதனையில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக 128 மணி நேரம் தொடர் நடனத்தினை ஆடி வருகின்றார்
இவரது தொடர் நடன நிகழ்வானது காணொளி மூலமும் நேரடியாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது