முல்லைத்தீவு -மருத்துவ மனைகளில் சிற்றூழியர்களின் பணி புறக்கணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் .

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள்

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் குதித்துள்ளார்கள்

முல்லை தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, வெலிஓயா,ஒட்டி சுட்டான், மல்லாவி, மாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

சுகாதார ஊழியர்களின் கோரிக்கையாக சுகாதார ஊழியர்களாகள் தற்போது  வாழ்க்கைக்கு முடியாத நிலமையொன்று உருவாக்கியுள்ளது

1. சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்)

2. மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு / விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்.

3. மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.)

4. தற்போது வழங்கப்படும் ரூபா.1000/- விசேட கொடுப்பனவு ரூபா.7000/- வரை அதிகரித்துக்கொள்வது, சீருடை கொடுப்பனவு ரூபா.15000/- வரை அதிகரித்துக்கொள்வது.

5. முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல்.

6. ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல்.

7. ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் / அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவதுதொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்.

8. மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திரசிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல்.

9. நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000/- இனால் சம்பளத்தை அதிகரித்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar