வடக்கில் 213 பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை
துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளாம்- -தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்தெரியவந்துள்ளது.
வட மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலையங்களைச் சேர்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்டமூலம் தெரியவந்துள்ளது
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 13 அதிபர் வெற்றிடங்களும் வலிகாமம் கல்வி வலயத்தில் 12 வெற்றிடங்களும் வடமராட்சி வலயத்தில் 6 வெற்றிடங்களும் தென்மராட்சி வலயத்தில் 8 வெற்றிடங்களும் தீவக வலத்தில் 23 வெற்றிடங்களும் கிளிநொச்சி தெற்கு வலயத்தில் 16வெற்றிடங்களும். கிளிநொச்சி
வடக்கு வலயத்தில் ஒன்பது வெற்றிடங்களும்,மன்னார் வலயத்தில் இருபத்து ஒன்பது வெற் றிடங்களும்,மடு வலயத்தில் இருபத்து ஐந்து வெற்றிடங்களும்,வவுனியா வடக்கு வலயத்தில் பதின்மூன்று வெற்றிடங்களும், வவுனியா தெற்கு வலயத்தில் பதினமூன்று வெற்றிடங்களும்,முல்லைத்தீவு வலயத்தில் பதினேழு வெற்றிடங்டங்களும் துணுக்காய் வலயத்தில் 29 வெற்றிடங்களுமாக வடக்கில் மொத்தம் 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்கு கின்றன. இந்த நிலையில் வடமா காணத்திலுள்ள பாடசாலைகளில் இடம்பெறும் நிர்வாக மற்றும் நிதி கையாளுகைப் பிரச்சனை களுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லாமை,சில பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகளுக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
வட மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களைச் சார்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்டமூலத்தில் தெரியவந்துள்ளது