நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய பாடசாலைகளுக்கு இந்த நிதி உதவியினை அவுஸ்ரேலியா மக்களின் வரிப்பணத்தில் அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த பவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு வடமாகாணம் தழுவியரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரியில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் ,கல்வி வலய அதிகாரிகள் , விவசாய திணைக்கள அதிகாரிகள் , சுகாதார துறை அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்