ஒதியமலை கிராமத்தில் விவசாய செய்கைக்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு!

ஒதியமலை கிராமத்தில் 34 குடும்பங்களுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றாக காணப்படும் ஒதியமலை கிராமத்தில் விவசாய தொழிலை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் மேட்டுநில பயிற்செய்கை நிலக்கடலைச் செய்கை நெற்செய்கை என பல்வேறு வகையான விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு காட்டு யானை என்பது ஆரிய அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.இவ்வாறு அழிவிலிருந்து மீள முடியாத பல மக்கள் விவசாய செய்கையினை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மக்களின் பொருளாதார பிரச்சினை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார விலையேற்றமும் காரணமாக அமைந்துள்ளது.

07-10-2023 அன்று ஒதியமலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில்
கிராமத்தில் வறுமைக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 34 குடும்பங்களுக்கு
கிராம சேவகரின் பரிந்துரைக்கு அமைவாக நெல் உளுந்து கச்சான் போன்றவற்றை பயிரிடுவதற்கான விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவில் இருக்கும் திரு சோமநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கி வருகின்ற வன்னியின் கண்ணீர் அமைப்பினால் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
7இலட்சத்தி 60 ஆயிரம் பெறுமதியான விதைதானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

Tagged in :

Admin Avatar