முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகள் காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் கடற்கரை பகுதி ஒன்றில் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்ப தகுந்த ரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் தேதி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக இன்றும் மூன்றாவது கனரக இயந்திரம் கொண்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த அகழ்வு பணியின் போது தொல்பொருள் திணைக்களம் பிரதேச செயலகம் கிராம சேவையாளர் தடையவியல் போலீசார் சிறப்பு அதிரடிப்படையினர் ராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கடற்கரையில் காணப்பட்ட குறித்த பகுதியானது முற்றுமுழுதாக அகளப்பட்டுள்ளதுடன் அதில் நின்ற மரங்கள் முற்றாக அகற்றப்பட்டு 15க்கும் மேற்பட்ட பனை கன்று வடலிகளும் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தோண்டப்பட்ட நிலையில் இன்று மாலை ஐந்து முப்பது மணி வரை அகழ்வு பணிகள் நீடிக்கப்பட்டுள்ளது நிலையில் குறித்த இடத்தினை மூடுமாறு நீதிபதி பணித்துள்ளார்
குறித்த பகுதியில் 13 அடி ஆளம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இதற்கு முன்னர் குறித்த பகுதியில் நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு நீரினை அகற்றி தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது இந்த அகழ்வ பணிக்காக குறித்த பகுதியில் நின்ற நாவல் மரம் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளியில் போடப்பட்டுள்ளன