பெரண்டீனா நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு தலா 3500 உதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம்(26) இடம்பெற்றது
நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பெரண்டீனா நிறுவனமானது பல வருடங்களாக பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகின்ற நிலையில் இவ்வாண்டு 13 மாவட்டங்களை சேர்ந்த 80000 பயனாளிகளுக்கு 250 மில்லியன் ரூபாவினை வீட்டுத்தோட்டத்திற்காக வழங்கவுள்ளது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2100 குடும்பங்களுக்கு தலா 3500 வீதம் 7.4 மில்லியன் ரூபா நிதியினை வழங்க உள்ளது
இதனுடைய முதல் கட்டமாக 60 பயனாளிகளுக்கு தலா 3500 பெறுமதியான நிதி உதவியை வழங்கி வைக்கின்ற நிகழ்வே இன்று(26) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது
பெரண்டீனா நிறுவன முல்லைத்தீவு கிளை முகாமையாளர் கை.நிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு. க.கனகேஸ்வரன் முல்லைத்தீவு மக்கள் வங்கி முகாமையாளர் கோபிகிருஷ்ணன், பெரண்டீனா நிறுவன வடக்கு வலய முகாமையாளர் இராஜேஸ்வரன்,பெரண்டீனா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.