Tuesday, May 6, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய மாம்பழத் திருவிழா

புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய மாம்பழத் திருவிழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய மாம்பழத் திருவிழா நேற்று (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 

புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 20.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது

அந்தவகையில் ஆறாம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று (25) ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.திவாகரசர்மா தலைமையில் மகோற்சவ குரு கிரிஜா தத்துவநிதி ஆகம தத்துவ போதகர் பிரம்மஸ்ரீ சோமஸ்கந்த உமாரமணச்சிவாச்சாரியார் அவர்களது பங்குபற்றுதலுடன் விசேட வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி  வந்து மாம்பழத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 

அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் ஆலயத்தில் இன்று(26) வேட்டைத் திருவிழாவும் நாளை (27) சப்பறத்திருவிழாவும் நாளை மறுதினம் (28) தேர்த்திருவிழாவும் இடம்பெற்று 29.09.2023 அன்று தீர்த்தத் திருவிழாவுடன் ஆலய உற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments