உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனஸே;வரன், முல்லைத்தீவு இராணுவ பாதுகாப்பு தலைமையக பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜெயவர்த்தன மற்றும் படை அதிகாரிகள் பொலீஸ் அதிகாரிகள் துறைசார் திணைக்கள அதிகாரிகள் சர்வமத தலைவர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது சர்வமத தலைவர்களின் உலக சமாதான நாளான இன்றைய ஆசியுரையுடன் நிழக்வுகள் நடைபெற்றுள்ளன.
ஆசியுரையில அருட்தந்தை அவர்கள் பொதுவாக குறிப்பிடுகின்றார்.
நாங்கள் போர் அற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆனால் அதற்குள்ளும் அமைதி இழந்த தனிப்பட்ட சமூக தேசத்தின் மத்தியில் நிம்மதியற்ற அமைதியற்ற வாழ்வு ஒன்று பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது.அந்த வாழ்வு மாறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அனைத்து இனங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் 180 பேருக்கு சப்பாத்துக்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன்தொடர்ந்து மாணவர்களை மகிழ்விப்பதற்கான இராணுவத்தினரின் இசை நிகழ்வும் விருந்துபசாரமும் நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்கடந்த காலங்களில் சமாதனமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யும் முகமாக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்த நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
எமது நாட்டினை பொறுத்த மட்டில் சமாதானமின்மையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அதனால் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் இதனுடன் ஒப்பிடுகையில் இனிமேல் எந்தவகையிலையும் சமாதானம் இல்லாமல் போகக்கூடாது என்ற அடிப்படையில் இவ்வாறான உலக சமாதான தினத்தினை நாங்கள் உரிய முறையில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மாணவ செல்வங்களுக்கு விழிப்பினை ஏற்படுத்தி சமாதானம் இல்லை என்ற நிலமை ஏற்படாமல் சமாதானத்துடன் வாழக்கூடிய நிலமை ஏற்படுத்தும் விதமான நிகழ்வாக இந்த நிழக்வு அமைகின்றது.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது