விஸ்வமடு பிரதேசத்தில் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!


தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் 21.09.2023இன்றைய தினம் மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்

பொதுச்சுடரை விசுவமடு வர்த்தக சங்கத்தலைவர் ஞானம் அண்ணன் ஏற்றிவைக்க மலர்மாலையை மாணவி திபிசா அவர்கள் அணிந்து வைக்க மலர்வணக்கத்தை தாயக அரசியல்துறை செயற்பாட்டாளர் யோகன் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தலைமை அஞ்சலி உரையை நிகழ்விற்கு தலைமை வகித்த பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் நிகழ்த்த தொடர்ந்து மாணவி அர்ச்சனா தியாக தீபம் திலீபன் நினைவைச் சுமந்த கவிதை வாசித்ததுடன் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36ம் ஆண்டு நினைவுகளைச் சுமந்த 7ம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றது…

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *