புதுக்குடியிருப்பில் காணாமல் போன குடும்பஸ்தர்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 10.09.23 அன்று தொடக்கம் காணவில்லை என பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய 5 ஆம் வட்டாரம் இரணைப்பாலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவரை தேடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காணாமல் போன அன்று மாலை 3.00 மணியளவில் இரணைப்பாலை பகுதியில் இருந்து குளம் ஒன்றினை பார்ப்பதற்காக சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
11.09.23 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவர் தொடர்பிலான தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள கிராம சேவையாளரிடமோ அல்லது பொலீஸ் அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு கோரியுள்ளார்கள்.

துக்குடியிருப்பு முல்லைத்தீவை சேர்ந்த இறப்பியேல் இருதயராசா வயது 65 என்னும் நபரை 11.09.2023 மாலை 3.00 மணியில் இருந்து காணவில்லை இவர் NP BFV 2972 என்னும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிள்ளில் சென்றுள்ளார்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0775345240, 0775758291 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *